உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கல்
திருச்சி, பிப். 13 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு உரிமைகள் திட்டத்தில் ஆர்வி.ட்ரஸ்ட் நிறுவனம் மூலமாக பணியாற்றும் கிராம அளவிலான களப்பணியாளர்களுக்கு அவர்களது பணியினை எளிதாக்கிடும் வகையில் மொபைல் செயலியை கொண்ட கையடக்கக் கணிகளை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உலக வங்கி நிதியுதவியுடன் உரிமைகள் திட்டம் திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எவரும் விடுபடாமல் தேவைகளான ஆரம்பநிலை பயிற்சிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை இலகுவாகவும் விரிவாகவும் பூர்த்தி செய்தல், ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், சிறப்பு பள்ளிகள், தொழில் பயிற்சி இணைப்பை அதிகரித்தல், பெற்றோர்களின் பொறுப்புப் பாரத்தை குறைத்தல், திட்ட செயல்பாட்டை மேலும் விரைவாக்குதல் போன்ற உதவிகள் இருப்பிடத்திற்கே சென்று சேர்த்திடும் வகையில் 252 களப்பணியாளர்கள் பயிற்சிகள் பெற்று வட்டார மற்றும் நகர அளவில் சேவைகளை செய்து வருகின்றனர். இந்த பணிகளானது அந்தந்த வட்டார பணியாளர்களை கொண்டு பயனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று ஆய்வு செய்து கணினி வாயிலாக தேவைகள் மதிப்பிடப்படுகிறது. இந்த பணிகளை மாநில அளவில் ஒருங்கிணைத்து சேவைகள் வழங்குவதை துரிதப்படுத்தும் விதமாக 18 ஓரிட சேவை மையங்கள், 4 கோட்ட அளவிலான சேவை மையங்கள் வாயிலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு இந்த கையடக்க செயலி வழங்கப்பட்டுள்ளது.
எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்தினாளிகளின் பெற்றோர்கள் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உலக வங்கி நிதியுதவியுடன் உரிமைகள் திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமான ஆர்வி ட்ரஸ்ட் நிறுவனப் பணியாளர்கள் களப்பணியில் கணக்கெடுக்கும் வரும்போது விவரங்களை சேகரிக்க வரும்போது மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை அவர்களிடம் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாய் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்,. இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இரா.ரவிச்சந்திரன், உதவி செயல்படுத்தும் அலுவலர் நல உரிமைகள் அலுவலர் திட்டம் ம.ரமேஷ், கிரேசி சகாயராணி, சமூக பணி உரிமைகள் திட்டம் ராமச்சந்திரன், இயக்குநர் ஆர்.வி.டிரஸ்ட் மற்றும் ரூபன் தேவமணி, மய்ய மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.