தெற்கு மாவட்ட அம்மா பேரவையினர் திண்ணைப் பிரச்சாரம்
திருச்சி, பிப்.14 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்து திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் கலந்து கொண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜா மணிகண்டன் உள்ளிட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் , உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.