மினிபேருந்துகளால் போக்குவரத்திற்கு இடையூறு: நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.(எம்.எல்) கோரிக்கை
திருச்சி, பிப். 14 காவல்துறை கண்டு கொள்ளுமா மோட்டார் ஆய்வாளர் கண்டு கொள்வாரா சி.பி.ஐ.(எம்.எல்) நகரகுழு கோரிக்கை
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே முக்கிய போக்குவரத்து செல்லும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மினி பேருந்துகளை சாலையின் முன்பாகவே நிறுத்துவதால் வாகன ஒட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது.
காவல்துறையினர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாமல் மினி பேருந்துகளுக்கு தனி இடம் கொடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.