மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியினங்கள் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

0 448
Stalin trichy visit

திருச்சி, பிப்.15  25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியினங்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்.*

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சியினங்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், மணிப்பூர்,ஹரியானா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேஷ் போன்ற மாநிலங்களில் கால முறை ஊதியத்தில் பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல டெல்லி யூனியன் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை கல்வியின் ஆசிரியர் வாரியம் வழியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. ஒடிசா ,தெலுங்கானா மாநிலங்கள் பணி நிரந்தரம் அறிவித்துள்ளது. எனவே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் உள்ளடங்கிய கல்விக்கூறில் தொடக்க உயர்தொடக்க கல்வி நிலை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளித்து பணிபுரிந்து வரும் சிறப்பு பயிற்றுநர்களை கடந்த 25 ஆண்டுகள் பணி சேவையை கருத்தில் கொண்டு கால முறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும். தொழிலாளர் வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, இறப்பு நிவாரணம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25 ஆண்டுகளாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆரோக்கிய மேரி வரவேற்புரை ஆற்றினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் எப்சி தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் சேதுராமன் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.