துணை முதலமைச்சர் உதயநிதி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி, பிப். 17 தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி வருகை : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (பிப்18) இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்து திருவெறும்பூர் தொகுதியில் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழா மற்றும் தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திருமணங்களை நடத்தி வைக்க வருகை தர உள்ளார்கள். எனவே அவரை வரவேற்க விமான நிலையத்தில் மாநில,மாவட்ட,
மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,, பகுதி,ஒன்றிய, நகர, பேரூர் ,வட்ட,வார்டு,கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.