மணப்பாறை, குளித்தலையில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

0 452
Stalin trichy visit

திருச்சி, பிப்.24  மணப்பாறையில் முதல்வர் மருந்தகத்தை ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

ஏழை, எளிய மக்கள் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் பெற்று பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தனர். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை, விராலிமலை சாலையில் முதல்வர் மருந்தகத்தை ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி திறந்து வைத்தார். அங்கிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி முதல் விற்பணையை தொடங்கி வைத்தார்.
விழாவில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், விற்பனையாளர்கள், திமுக ஒன்றிய அவைத்தலைவர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சந்திரகுமார், முன்னாள் ஒன்றிய கவுண்சிலர் செல்வராஜ், வர்த்தக அணி புலி ரெங்கசாமி, வி‌.பி. பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நிர்வாகிகள்‌ மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குளித்தலை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே மக்கள் மருந்தகத்தை திமுக நகர செயலாளர் மு.ம.செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகோபால் ஆகியோர் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

இதில் காங்கிரஸ் நகர தலைவர் செல்வா, நகர்மன்ற உறுப்பினர்கள் பால்ராஜ், ஜான்பிரிட்டோ, சுஜாதாராஜரெத்தினம், இலியாஸ், வெற்றி, பந்தல் முருகேசன், மு.சோழராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.