பா.ஜ.க. சார்பில் மத்திய அரசு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

0 243
Stalin trichy visit

திருச்சி, பிப். 24 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்ததில் பாஜக சார்பில் 2025 – 26 ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட் விளக்கம் மற்றும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது. தி.மு.கவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கின்றதா? இல்லையா? தி.மு.க காரர்களின் பிள்ளைகள் இந்திபடிக்கின்றனரா இல்லையா? அத்தனை தி.மு.க காரர்களும் எங்கள் பிள்ளை இந்திபடிக்கவில்லை என்று சொல்லுங்கள். இனி நாங்கள் அரசியல் செய்யவில்லை. நரேந்திரமோடி இந்தியை படி என்று சொல்லவில்லை. இந்திய மொழிகளில் ஒன்றை படியுங்கள் என்று தான் சொல்கிறார். 3 வதாக ஒரு மொழியை படித்துக் கொள்ளுங்கள். அந்தந்த பகுதிகளில் மாணவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்கள் அதை 3 வது மொழியாக படித்துக் கொள்ளட்டும்.

வட இந்தியாவில் உள்ளவர்கள் தென்னிந்திய மொழி ஒன்றை படிக்க வேண்டும், தென்னிந்தியாவில் இருப்பவர்கள் தேவையென்றால் ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம் என்பதற்கு தான். மொழி என்பது நம்மை பிணைக்கும் கருவி. அதை பிளக்கும் கருவியாக்க முயற்சிப்பது தி.மு.க. ஆனால் அது நடக்காது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். கேரளா, கர்நாடக மாநிலங்களில் உள்ள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்ன ஆனது அது அறிவாலயத்தில் அடமானம் வச்சாச்சு. அறிவாலய அடிமைகளுக்கு இது தெரியாது. மும்மொழிக் கொள்கை வருவதால் தமிழ் அழியவே அழியாது. தமிழ் அழிந்து விடும் என்றால் தமிழனுக்கு கேவலம் இல்லையா? இந்தி கற்றுக் கொண்டால் தமிழ் அழியாது தி.மு.க அழிந்து விடும் என்பதால் எதிர்க்கிறார்கள்.
நரேந்திரமோடி பேசுவது மக்களுக்கு நேரடியாக புரிந்து விடும் என்பதால் தான் எதிர்க்கிறார்கள். பி.ஜே.பி.ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கடிதம் எழுத போகிறேன். 3 வது மொழியாக தமிழை அறிமுகப்படுத்துங்கள் என்று சொல்லப்போகிறேன். இந்தி மாநிலங்களில் தமிழை நுழைப்பதற்கான திட்டம் இது என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
கோவைக்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக அலுவலகத்தை திறக்கவில்லை. தி.மு.கவின் அஸ்திவாரத்தை கழட்டத்தான் வருகிறார். தி.மு.க அலுவலகத்தை மூட பிள்ளையார் சுழி போட வருகிறார். தி.மு.க ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றது. பாஜக வளர்ச்சி பெற போவதை தி.மு.க பார்க்கத் தான் போகிறது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.