பாலியல் சீண்டல்களை கண்டித்து த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

0 225
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8 மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை கண்டித்து உலக மகளிர் தினத்தில் தவெக சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல்களை கண்டித்து உலக மகளிர் தினமான இன்று பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு பேருந்து நிலையம் அருகே வந்ததும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.