நாம் தமிழர் கட்சி நிர்வாகி காயம் : அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

0 223
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 8 மணப்பாறை அதிமுக நிர்வாகிக்கு சொந்தம் இடத்தில் பாறைகளை வெடி வைத்து உடைத்தபோது தலையில் கல்பட்டு நாதக நிர்வாகி காயம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நாம் தமிழர் கட்சியில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி பொருளாளராக உள்ளார். பெருமாம்பட்டியில் இருந்து பொய்கைப்பட்டிக்கு முடி வெட்டுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மணப்பாறை அதிமுக நகர துணைச்செயலாளராக உள்ள பத்தி பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தாமல் பாறைகளுக்கு கம்பரசர் மூலம் வெடி வைத்ததில் சிறிய பாறை ஒன்று பறந்து வந்து சாலையில் சென்று கொண்டிருந்த சரவணன் தலையின் முன் பகுதியில் பட்டு காயம் ஏற்பட்டதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சரவணன் ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தின் முன் பகுதியும் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் பத்தி பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.