குற்ற நிகழ்வுகளை தடுப்பது குறித்து காவல்துறை விழிப்புணர்வு முகாம்

0 191
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 14  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வள்ளலார் நகர் ரங்கா கார்டனில் வசித்து வரும் மக்களிடம் காவல்துறை விழிப்புணர்வு முகாம் நேற்றிரவு நடத்தினர்.

லால்குடி அருகே அப்பாத்துரை ஊராட்சியில் உள்ள வள்ளலார் நகர் ரங்கா கார்டன் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சமயபுரம் காவல் துறையினர் அப்பகுதி மக்களை சந்தித்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அருகில் உள்ளவர்களுக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள், இரவு நேரங்களில் பக்கத்து வீடுகளில் சத்தம் கேட்டாலோ ஏதேனும் சந்தேகம் படும்படியான தெரிந்தாலோ காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருடு போகாமல் எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுரைகளையும் கூறினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.