கண்தானம் செய்தவரின் வாரிசுக்கு பாராட்டு
திருச்சி, மார்ச் 15 கண்தானம் செய்தவரின் வாரிசுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற எஸ்.நமசிவாயம் தந்தையும், மக்கள் சக்தி இயக்க நிர்வாகி தரணி-யின் தாத்தாவுமான, ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் டி.சுவாமிநாதன்(92) நேற்று (மார்ச்14) இயற்கை எய்தினார்.
உயிர் உடன் இருக்கும் போது இரத்ததானம், இறந்த பிறகு கண்தானம் என்ற சொல்லுக்கு ஏற்ப, கண் தானம் செய்த டி.சுவாமிநாதன் தியாகத்துக்கு மிக்க நன்றி! நற்பணியை செய்த வாரிசுகளுக்கு மக்கள் சக்தி இயக்கம், மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் பாராட்டு தெரிவித்தார்.