நீர்வள – நிலவள திட்டத்தின் கீழ் பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி

0 278
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில்  வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமையில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் பயிர்களில் நீர் மேலாண்மை குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி பயிர்களில் நீர் மேலாண்மை முறைகள் பற்றியும் நடப்பு நிதி ஆண்டில் உள்ள இடுபொருட்கள் மானிய திட்டங்கள் பற்றியும் உரை ஆற்றினார்.
MR பாளையம் வன சரக அலுவலர் மரப்பயிர்கள் வளர்ப்பு பற்றி உரை ஆற்றினார். இதில் வேளாண்மை அலுவலர் தேசிங்கு ராஜா நன்றி உரை ஆற்றினார்.
பிற துறை சார்ந்த அலுவலர்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.
வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக மரக் கன்றுகள் வழங்கப்பட்டது.  முன்னோடி விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.