நிர்வாக தோல்வியை மறைக்கவே, தொகுதி மறுவரையை தமிழ்நாடு கையில் எடுத்துள்ளது: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு
திருச்சி, மார்ச் 19 தமிழக அரசு ஊழல் மற்றும் நிர்வாக தோல்வியை மக்களிடமிருந்து திசை திருப்பவே தொகுதி மறுவரை என்பதை தமிழ்நாடு கையில் எடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் வளாகத்தில் நடைபெறும் கம்ப ராமாயண பாராயணம் துவக்க விழா கலந்து கொள்வதற்காக வருகை தந்தார் அப்போது அவருக்கு தென்னக பண்பாட்டு மையம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கம்ப ராமாயண பாராயணம் நிகழ்ச்சியில் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்..
பின்னர் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் பேட்டி அளித்தார். அதில், ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்தது மனதிற்கும் உடலுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. வரலாற்று புகழ் வாய்ந்த ஸ்ரீரங்கம் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியாவில் கலாச்சாரத்தையும் சுற்றுலாவையும் மேம்படுத்த,
இரண்டு திட்டங்களை பாரதப் பிரதமர் மோடி வகுத்துள்ளார்.அந்தத் திட்டங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மூன்றாம் முறையாக பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ஊழல் மற்றும் தமிழக அரசின் தோல்வியை மக்களிடமிருந்து திசை திருப்பவே தொகுதி மறுவரை என்பதை தமிழ்நாடு கையில் எடுத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தொகுதி மறுவரையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.