சீன எல்லையில் நடந்த வாகன விபத்தில் லால்குடியைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி

0 777
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணியம் கிராமம் மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ், ராஜம்மாள் தம்பதி. இவர்களது மகன் தேவ ஆனந்த் ( 24) இவருக்கு அண்ணன் சம்மனசு மற்றும் அக்கா ரீட்டா மேரி ஆகியோர் உள்ளனர்.கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செகந்திராபாத்தில் ராணுவ பயிற்சியை முடித்துவிட்டு ஜான்சி ரெஜிமென்டில் பணியில் சேர்ந்துள்ளார்.

 

அங்கு பணியை முடித்துவிட்டு தற்போது  சிக்கிம் மாநிலம் காங்டாக்  ஏ.ஓ.சி ரெஜிமென்ட் சீனா எல்லையில் நாயக்காக( ராணுவ தடவாள ஆயுதங்கள் மற்றும் உதிரி பாகங்கள் பராமரிக்கும்) பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 30 ந்தேதி சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த தேவ ஆனந்த் பணியை  முடித்துவிட்டு ராணுவ டிரக்கில் திரும்பும்போது திடீரென வாகனம் தடம் புரண்டு மலையிலிருந்து 3 ஆயிரம் பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணம் செய்த தேவ ஆனந்த் உட்பட 6 பேர் பலியாயினர். தேவ ஆனந்த் பலியான தகவல் ராணுவ அதிகாரிகள் மூலம் லால்குடி திண்ணியத்தில் உள்ள பெற்றோருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரரின் விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து பின்னர் சாலை மார்க்கமாக இன்று நள்ளிரவில் சொந்த ஊருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளை 10 மணிக்கு  ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். ராணுவ வீரர் விபத்தில் இறந்த செய்தி கேட்டு கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கை  எடுத்த திருச்சி எம்பி சிவாவிற்கு அவரது சகோதரர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  மூலம் நன்றியை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.