கராத்தே போட்டியில் விழியிழந்தோர் பள்ளி மாணவிகள் சாதனை
திருச்சி, மார்ச் 25 திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழியிழந்தோர் பள்ளி மாணவிகள் கராத்தே கற்று சாதனை.
இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ-விடம் கராத்தே கற்று இதில் சாதனை செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் பரிசுகளை வழங்கினார். அருகில் பள்ளி தலைமை ஆசிரியை B. சோபியா மாலதி துணை தலைமை ஆசிரியர் V. சுப்பிரமணியன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் M. வாசுதேவன் (பிளாக் பெல்ட் 8th டான் ) மற்றும் மாணவிகள்,
ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.