பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

0 34
Stalin trichy visit

திருச்சி ஜுன் 4 பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, திருச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை தேர் போல் இழுத்து நூதன போராட்டம் – காவல்துறையினர் அனுமதிக்காததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

வணிகப் பயன்பாடு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மத்திய மோடி அரசின் போக்கைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர்கள் சிவா மற்றும் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆட்டோ ஒன்றிற்கு கயிறு கட்டி, தேரை வடம் பிடித்து இழுப்பது போல சாலையில் இழுத்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் காவல்துறையினர் அனுமதிக்காததால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மகளிர் அணியினர் அந்த இடத்தில் கும்மி அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பின்னர் காவல்துறையினர் அனுமதி கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் பெரியசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும், மாநில நிர்வாகிகள் இந்திரஜித், செல்வராஜ், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன், முத்துசாமி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.