ஹவுரா ரயிலில் 2.500 கிலோ கஞ்சா பறிமுதல்

0 329
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 25  திருச்சி வந்த ஹவுரா ரயிலில் 2.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ்,  உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் K. P. செபாஸ்டியன் மற்றும .L .பாஸ்கர், DSP/NIB/CID/Trichy  ஆகியோர்   தலைமையில் இன்று  திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் ரயில் எண்.12663 ஹவுரா- திருச்சி எக்ஸ்பிரஸ் -ல் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது திருச்சி பிளாட்ஃபார்ம் எண்.03ல் மேற்படி வண்டியின் பொது பெட்டி எண் 245714 ல் சந்தேகத்திற்குரிய இரண்டு கைவிடப்பட்ட பாலித்தீன் மூட்டை கிடந்தது. அதை சோதனை செய்த போது, அதில் 2.500 கிலோ உலர் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணை செய்த போது அதனை உரிமைக்கோர எவரும் முன் வரவில்லை.
பின்னர் மேற்கூறிய கைப்பற்றப்பட்ட ரூ.50,000/- மதிப்புள்ள 2.500 கிலோ (தோராயமாக) கஞ்சாவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் கே.விஸ்வநாதன் SI/NIB/CID/Trichyயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.