படைப்பணியின் போது இறந்த லால்குடி ராணுவ வீரர் தேவ ஆனந்த் உடலுக்கு அமைச்சர்கள் மரியாதை

0 733
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் நாயக் அ.தேவஆனந்த் இந்திய சீன எல்லையில் படைப்பணியின் போது மரணமடைந்தார். இதையடுத்து திண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் தேவஆனந்த் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, லால்குடி எம்.எல்.எ. சவுந்தரபாண்யன், முன்னாள் படைவீரர் நலஅலுவலக உதவி இயக்குநர் ஞானசேகர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.