திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வார்டு எண்-10க்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் T.கனகவள்ளிக்கு ஆதரவாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வளநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்கு சேகரித்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர் கண்ணூத்து பொன்னுசாமி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட மீனவரணி செயலாளர் N.பொன்னுசாமி, மற்றும் கழக முன்னோடிகள் பெருமாள், ஆறுமுகம், சோனா.எத்திராஜ், சாய் சுரேஷ், அன்பு பிளக்ஸ் செல்வன், மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, கிளை கழக நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.