பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 12
Stalin trichy visit

பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும்
உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் ‘கெடு’
.தமிழகத்தில்உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமை யாக அகற்ற உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் ம. தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்கள் முழு மையாக அகற்ற வேண்டும் என கட கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அறிவுறுத்தியும் அகற்றாதபட் சத்தில் அரசே இந்த மரங்களை அகற்றிவிட்டு மிக ஆழமாக வேர்கள் ஊடுருவி இருந்தால் ஏக்கருக்கு ரூ.5ஆயி ரம் வீதமும், இல்லாதபட்சத் தில் தில் ஏக்கருக்கு ஏக்கருக் ரூ.2 ஆயிரம் வீதமும் சம்பந்தப்பட்டவர்க ளிடம் வசூலித்து கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டி ருந்தது. இந்த பணியை முழுமூச்சுடன் மேற்கொண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகமுடித்து அதே இடத்தில் நாட்டு மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் /விரைந்து செயல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, நீர்நிலைகள் மற் /றும் அரசு புறம்போக்கு இடங் |களில் இருக்கும் கருவேல | மரங்களை அகற்றும் பணியை பல்வேறு மாவட்ட நிர்வாகங் கள் மேற்கொண்டு வருகின் | றன . அதேவேளையில், பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற /வும் நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வரு கின்றனர்.
இது தொடர்பாக புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வா கங்களின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
அனைத்து கிராம ஊராட்சிக ளிலும் தனிநபருக்கு சொந்த மான பட்டா இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங் களைவேருடன் பட்டாதாரர் செல கள் தங்களது சொந்த செல வில் ஜூலை 31-ந் தேதிக்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் அரசே சீமைக்கரு வேல மரங்களை அகற்றி விட்டு அதற்கான செலவு தொகையை பட்டாதாரர்க ளிடம் இருந்து வசூலிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின் வின பேரில் மாவட்ட நிர்வாகங் கள் இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ள போதிலும், விவசா யிகள், பொதுமக்கள் மத்தி யில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பட்டா நிலங்களில் சீமைக்க ருவேல மரங்களை பொதுமக்கள் தாங்களாகவே வளர்க்க வில்லை. அவை தானாகவே
வளர்கின்றன. பலர் தங்களது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போட்டுள்ளனர்.   இதுபோன்ற நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. கிராமங்களில் அன்றாம் வாழ்க்கையை நடத்துவதற்கே! சிரமப்படுபவர்கள் கூலிக்கு-ஆட்களை நியமித்தோ அல்லது பொக்லைன் போன்ற எந்திரங்கள் மூலமாகவோ சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது என்பது இயலாத காரியம்.

எனவே, தனியார் பட்டா நிலங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அரசு செலவிலே அகற்ற வேண்டும் பட்டா நிலங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாதபட்சத்தில் அரசே அகற்றி விட்டு அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூ லிக்க ஐகோர்ட்டு உத்தரவிட் டிருந்தாலும் ஒரு நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் வகை யில் அரசு செலவிலே சீமைக்கருவேல மரங்களை அகற்றும் வகையில் அந்த உத்தரவை மாற்றியமைக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண் டும்’என தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.