நாளை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் – காணொளியில் கலந்துகொண்ட அமைச்சர்

0 349
Stalin trichy visit

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பாக நடைபெறக்கூடிய மறியல் போராட்டங்களில் தெற்கு மாவட்ட விவசாய அணியின் சார்பாக பங்கெடுப்பது குறித்து கூட்டம் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக விவசாய அணி அமைப்பாளர் கே.சி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் காணொளியின் வாயிலாக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார்

ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு எதிரான மன நிலையை எதிர்த்து நாம் போராட முன்வரவேண்டும் விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட விவசாய அணியின் துணை அமைப்பாளர்கள் பண்டியன், தங்கராஜ், வினேத்குமார் ராதாகிருஷ்ன், சங்கர், லோகநாதன் மற்றும் ஒன்றிய நகரப்பகுதி பேரூர் துணை அமைப்பாளர்கள் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.