வஃக்பு திருத்தச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் : காதர்மொகிதீன் பேட்டி

0 187
Stalin trichy visit

திருச்சி, ஏப்.11  உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறோம் – திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல்ரஹ்மான், மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி எம்.பி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் காதர்மொகிதீன் செய்தியளர்களை சந்தித்து பேசுகையில்,…

சுப்ரீம் கோர்ட் எங்களுடைய கருத்தை கேட்காமல் எந்த விதமான தீர்வும் சொல்லக்கூடாது என ஒன்றிய அரசு குறுக்கீடு செய்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு வர உள்ளது.

வக்பு சட்டத்தை ஒத்தி போடவோ, தடை விதிக்கவோ உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.

18 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
உச்சநீதிமன்றம் சாதகமாக பதில் கொடுக்குமனால் போராட்டங்களை தள்ளி வைப்போம்.

மே 9, 10, 11, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் 9 வது உலக மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது, மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது என்ற கேள்விக்கு,

முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு. இந்தப் பேரடி விழுந்த பிறகும் தொடர்ந்து ஆளுநர் இருக்கிறார் என்றால் காரணம் மத்திய அரசு.

வருகிற சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதி கேட்க வேண்டும் என்று பல்வேறு மாவட்டங்களில் வந்தவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வக்பு சொத்துக்களை சரியாக பராமரிக்கவில்லை என்று பாஜக கூறுகிறது என்ற கேள்விக்கு,.

வக்பு சட்டத்தை திருத்த வேண்டும் என அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர்.
வக்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்து முயற்சி செய்கிற போது இஸ்லாமிய மார்க்க மேதைகள், அறிஞர்களிடம் ஆலோசனை செய்து கொண்டு வருவோம் என்று கூறினார்கள்.
சட்டத்தில் 44 திருத்தங்களை கொண்டு வந்தீர்கள். இதனை கொண்டு வருவதற்கு முன்பு எந்த இஸ்லாமிய அறிஞர்களை கலந்து பேசினீர்களா? என்பது எங்களது கேள்வி. கலந்து ஆலோசித்து சட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் அதை வரவேற்றிருப்போம். உமீத் என்ற வார்த்தையை வக்புக்கு மாறாக பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். இது நாடகமாகும்.

இந்த சட்டம் இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமாகும், எனவே எதிர்த்து நிற்போம். நீதிமன்றத்தோடு நிற்காமல், ரோட்டோடு நிற்காமல் இது எங்கே போய் முடியும் என்றும் சொல்ல முடியாது. கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.