கோவில் வளாகத்தில் கிடந்த பழைமையான 2 சிலைகள்: சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் விசாரணை
மணப்பாறை அருகே பழைமையான கோவில் வளாகத்தில் கிடந்த 2 சிலைகள்.
சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழைமையான புகழ்பெற்ற இந்த கோவில் வளாகத்தில் பழைமையான இரண்டு சிலைகள் கிடப்பதாக இந்து சமய நிலையத்துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி திருச்சியில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சிலை பல நூறாண்டுகள் பழைமையானதாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக அந்த இரண்டு சிலைகளும் அதே பகுதியில் தான் கிடப்பதாகவும், ஒரு சிலை தூவாரபாலகராக இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே கோவிலில் தூவாரபாலகர் சிலை உள்ளதால் அந்த காலங்களில் சிலை செதுக்கும் போது சிலை செய்யும்போது ஏதேனும் சேதமடைந்திருந்ததால் அப்படியே விட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.