பாஜக நிர்வாகி வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை

0 192
Stalin trichy visit

திருச்சி, ஏப்.11  மணப்பாறையில் பாஜக நிர்வாகி வீட்டில் 5 சவரன் நகை கொள்ளை.
வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மணப்பாறைபட்டியில் வசித்து வருபவர் குமார் (வயது 38). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வரும் இவர் மணப்பாறை நகர பாஜக துணைத்தலைவராக உள்ளார். நேற்று இரவு குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கிய நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவைத்திறந்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரேவில் இருந்த துணிகளை களைத்து அதனுள் இருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.