போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் கைது : பணம், பைக் பறிமுதல்

0 202
Stalin trichy visit

திருச்சி ஏப்.12   திருச்சி கே.கே.நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் கே.கே.நகர் கலிங்க நகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை காஜா பேட்டையை சேர்ந்த நாகராஜ், கிராப்பட்டியை சேர்ந்த பாலாஜி ,கே.சாத்தனூரை சேர்ந்த விஷால், கே.கே.நகர் ஐயப்பன் நகரை சேர்ந்த கிருத்திக்குமார், கிராப்பட்டியை சேர்ந்த ஆகாஷ் பால்ராஜ், மணிகண்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், ஐயப்பன் நகரை சேர்ந்த ஸ்டீபன் ஆகிய 7 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை , சிரஞ்சுகள், கட்டு கட்டாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.