சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

0 280
Stalin trichy visit

திருச்சி ஏப்.12 திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். தந்தை, மகன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி, பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவர் தனது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே வழியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆண்ட்ரூஸ் ஸ்டாலின் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஆண்ட்ரூஸ் ஸ்டாலின், மனைவி சத்யா மற்றும் அவரது 11 வயது மகள் பெரியநாயகி இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது ஏறி இறங்கியது. பின்னர் அந்த வாகனம் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சத்யா மற்றும் அவரது 11 வயது மகள் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த ஆண்ட்ரூ ஸ்டாலின் மற்றும் அவரது 6 வயது மகன் ராம்ஜியாஸ் ஆகியோரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.