மணப்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

0 237
Stalin trichy visit

திருச்சி, ஏப்.16  மணப்பாறையில் கால்நடை சந்தையில் கூடுதல் கட்டணம் அடாவடியாக வசூல். நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் மாடு மற்றும் ஆடுகள் என கால்நடைகள் விற்பனைக்கு வரும். இந்த கால்நடை சந்தை நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு அரசு நிர்ணயிக்கும் தொகையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் வசூல் செய்வார்கள். இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்ணயித்த தொகையை விட பன்மடங்கு அதிகமாக ஒப்பந்ததாரர் வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாடு ஒன்றுக்கு 100 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக ரூ.300 வசூலிக்கப்படுவதாகவும், சரக்கு ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அடாவடியாக வசூலிக்கப்படுவதாகவும் இதனால் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களின் கோரிக்கை குறித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் நகராட்சி நிர்ணயம் செய்த கட்டண‌ விபரம் குறித்த அறிவிப்பு பலகை வைத்திட வேண்டும் புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்ணை அதில் குறிப்பிட வேண்டும் கட்டணத்தை விட கூடுதலாக கட்டண வசூல் செய்தால் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.