தனியார்மய கொள்கையை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப்.12 மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தமிழக அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், திருச்சி மண்டலம் சார்பில் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொ.மு.ச. மண்டல பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மத்திய சங்க தலைவர் சேகர், துணைத் தலைவர்கள் கண்ணன், அன்பழகன், சங்கர் கணேஷ், ஆனந்தன், கோட்டச் செயலாளர்கள், அலுவலகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தமிழக த.வெ.க. அரசின் தனியார் மய கொள்கையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் போக்குவரத்துத் துக்கழக தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மண்டல பொருளாளர் எஸ். அப்பாவு நன்றி கூறினார்