அமைச்சர் பொன்முடியை கண்டித்து வி.எச்.பி. ஆர்ப்பாட்டம்

0 272
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1 8விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக ஹிந்து தர்மத்தின் இரு சமயத்தின்( சைவம்,வைணவம்) சின்னங்களை இழிவாக பேசிய பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சுதாகர் திலக் தலைமையில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  கோட்டச் செயலாளர் முருகேசன்,கோட்ட பொறுப்பாளர்கள் ராஜகோபால் சர்மா ஜி,வாளடி சங்கர் ஜி,பிரபாவதி,ஆகியோர் முன்னிலை வைத்தனர் மாவட்ட செயலாளர் என் ஆர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.  மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் கே. சசிகுமார்,மாநில பஜரங்தள் இணை பொறுப்பாளர் எஸ்.ஆனந்த் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். வரகனேரி பிரகண்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சண்முகம்,அழகு யுவராஜ்,பரமசிவம், கார்த்தி,ராஜேந்திரன்,செந்தில்நாதன்,  கார்த்திகேயன், வி.ரவிச்சந்திரன்,எம்.தர்மராஜ் மற்றும் ப்ரகண்டம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.