பவானியில் மாயமான 10 ஆம் வகுப்பு மாணவிகள் சமயபுரத்தில் மீட்பு

0 184
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18  ஈரோடு மாவட்டம், பவானி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  ஏப். 15 ஆம் தேதி 10-ம் வகுப்பு இறுதி தேர்வு எழுதி முடித்த 5 மாணவிகளை காணவில்லையென மாணவிகளின் பெற்றோர்கள் இரவு 0915 மணிக்கு பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்படி பவானி காவல் நிலைய குற்ற எண்:188/25 / -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி மாணவிகள் குறித்து விசாரித்த வகையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

உடனடியாக, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினத்தை  தொடர்பு கொண்டு மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பகிர்ந்து காணமால் போன பள்ளி மாணவிகளை கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இது தொரடர்பாக, திருச்சி மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அதி தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரவு 12.58 மணிக்கு சமயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்றுகொண்டிருந்த மேற்கண்ட 5 பள்ளி மாணவிகளையும் சமயபுரம் காவல் ஆய்வாளர்  வீரமணி, மீட்டு சமயபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று, அங்கு அலுவலில் இருந்த  ஜெயசித்ரா, காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார்.

இது சம்மந்தமாக, உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில்பகவதி அம்மாள், பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் நேற்று (16.04.2025) காலை 0400 மணிக்கு மேற்படி 5 பள்ளி மாணவிகளையும் திருச்சி சமயபுரத்தில் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி பள்ளி மாணவிகள் காணாமல் போனது சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு மேற்படி மாணவிகளை மீட்டுள்ளது பொதுமக்களிடம் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரெத்தினம்  மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  . சுஜாதா பாராட்டினார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.