இனாம்குளத்தூர் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

0 280
Stalin trichy visit

திருச்சி, ஏப். 18  திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிருஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து உரையாற்றினார்.

உடன் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் உதவி நீதிபதி சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் சரபோஜி, விஜய்ராஜேஷ், மரம் வளர்ப்பு ஆர்வலர் தாமஸ் மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.