அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஏப்.22 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாவட்ட மகளிரணி சார்பில் பெண்களை ஆபாசமாக, இழிவு படுத்தி பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புள்ளம்பாடியில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று உரையாற்றினார்.
நிகழ்வில் பங்கேற்ற மகளிர் அணியினர் கண்டனமுழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் G.செல்வமேரி ஜார்ஜ் மாவட்ட கழக இணை செயலாளர் ரீனா செந்தில், பொதுக்குழு உறுப்பினர் P.சாந்தி, மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சசிகலா, ஊட்டத்தூர் ராமாயி, கண்ணகி, ஜெயா பாபு, இளையராணி,, சுதா பத்தி பாஸ்கர், சர்மிளா சுரேஷ், லெட்சுமி, சரசு, குமாரி உள்ளிட்ட மகளிர் அணியினர் மற்றும் மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழக செயலாளர்கள் அசோகன், சிவகுமார், பழனிசாமி, கார்த்திக், அன்பரசன் மற்றும் புள்ளம்பாடி பேரூர் செயலாளர் ஜேக்கப் அருள் ராஜ், பாசறை செயலாளர் அருண்நேரு, இளைஞர் அணி செயலாளர் சண்முக பிரபாகரன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.