வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு

0 243
Stalin trichy visit

திருச்சி ஏப் 23 திருச்சி கே.கே நகர் ஐயப்பன் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன் இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை உறவினர் வச்சலா என்பவரிடம் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்று விட்டார்.

இந்த நிலையில்  நேற்று வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே நுழைந்து பிரோவில் இருந்த 550 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருநாராயணன் உறவினர் வச்சலா கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.