கடையின் பூட்டை உடைத்து கலர் பிரிண்டர் திருடியவர் கைது
திருச்சி ஏப் 23- திருவரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 49)இவர் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார், சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார், இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்து கலர் பிரிண்டரை திருடிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இது குறித்து மகேஸ்வரன் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 42) என்பவர்கடையின் பூட்டை உடைத்து கலர் பிரிண்ட் ர்ரை திருடி சென்றதது தெரிய வந்தது. இதைபடுத்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷசை கைது செய்துள்ளனர்.