பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்தவர் கைது

0 200
Stalin trichy visit

திருச்சி ஏப்.24  திருச்சி,  திருவரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் முத்து செல்வியின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார். அப்போது முத்துச்செல்வி திருடன் ….திருடன் …..என கூச்சலிட்டார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு ஓடி நகை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்.டி.மலை தெற்கு தெருவை சேர்ந்த பிச்சைமுத்து மகன் சுகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.