திருச்சியில் பைக் திருடன் கைது
திருச்சி ஏப் 28 திருச்சி ஜீவா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஹர்ஷதுல்லா ( வயது 27) இவர் கடந்த 25 ந்தேதி தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் மறுநாள் காலை மர்ம ஆசாமி யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி தென்னூர் பகுதியில் சந்தேகத்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி தென்னூர் சென்ட்ரல் பஜாரை சேர்ந்த இர்ஷாத் பாபு (வயது 32) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் தான் ஹர்ஷதுல்லா மோட்டார் சைக்கிள்யை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து கோட்டை குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இர்ஷாத் பாபுவை கைது செய்து திருடிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.