திருச்சி மாநகராட்சி வார்டு எண்.47க்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

0 368
Stalin trichy visit

திருச்சி, மே 5 திருச்சி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட காலிப்பதவியிடத்திற்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட காலிப்பதவியிடத்திற்கு நகர்புற உள்ளாட்சி தற்செயல்/இடைக்காலத் தேர்தல்கள் 2025 நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்காளர் பட்டியலை இன்று மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மெ.த.சாலைதவவளன் மற்றும், த.சசிகலா, உதவி ஆணையர்(பணிகள்) ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வெளியிட்டார்கள்.

இதில் ஆண் வாக்காளர்கள் 5738, பெண் வாக்காளர்கள் 6133, மூன்றாம் பாலினத்தவர் 2 மொத்தம் 11873 வாக்காளர்கள் பட்டியிலில் அடங்கியுள்ளனர். பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி மய்ய அலுவலகம், வார்டுக்குழு அலுவலகம் -2 மற்றும் வார்டுக்குழு அலுவலகம் -4 இல் வைக்கப்பட்டுள்ளது வாக்காளர் பட்டியல் அந்த வார்டு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.