அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம் – அமைச்சர்கள் ஆய்வு
திருச்சி, மே 5 திருச்சி, துவாக்குடி அரசு பல்தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான வீடுதிக் கட்டடங்களை வரும் 8 ஆம் தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் திறந்து வைக்கவுள்ளதை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்டல தலைவர் மதிவாணன், அரசு அலுவலர்கள் உள்ளனர்.