மணப்பாறையில் விளம்பர பேனர்கள் அகற்றம்

0 195
Stalin trichy visit

திருச்சி, மே 26  மணப்பாறையில் வட்டாட்சியர் மற்றும் நில அளவையரையும் கைது செய்யக் கோரி சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் 3 இடங்களில் வைக்கப்பட்டிருந்த  பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்து நிலையம், காமராஜர் சிலை மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே என மூன்று பகுதிகளில் மணப்பாறை வட்டாட்சியர் செல்வம் மற்றும் நில அளவையர் கலைவாணி ஆகியோரை கைது செய்ய கோரி ஜுன் 2 ம்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் ஆந்திரா கும்பலுக்கு ஆதரவாகவும் பூர்வகுடிகளுக்கு எதிராகவும் செயல்பட்டதாக சர்ச்சைக்குரிய வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இந்த பேனர் வைக்கப்பட்டதில் சம்பந்தம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மூன்று இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை இன்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றினர்.

மேலும் இதுகுறித்து வட்டாட்சியர் செல்வம் மணப்பாறை போலீசில் தன்மீது அவதூறு பரப்புவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். மணப்பாறையில் முக்கிய மூன்று இடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.