மணப்பாறையில் பா.ஜ.க.வினர் தேசியக் கொடி ஏந்தி பேரணி
திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாஜகவினர் தேசியக் கொடி ஏந்தி பேரணி சென்றனர்.
பல்ஹாம் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமருக்கும் நன்றி செலுத்தும் வகையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. திருச்சி சாலையில் இருந்து புறப்பட்ட பேரணி பொத்தமேட்டுப்பட்டி அருகே நிறைவு பெற்றது. இதில் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்தும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.