தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு இரண்டாமிடம்

0 474
Stalin trichy visit

இரண்டாவது இந்திய தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி டார்ஜிலிங்கில் உள்ள கோர்கா ரங்மஞ்ச் பவனில் (பானு பவன்) கடந்த ஞாயிற்றுக்கிழமை 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, சிக்கிம், மேற்கு வங்காளம், கர்நாடகா, கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டா, டீம் கட்ட, குமிட்டே என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சார்பில், ஐ எஸ் கே எப் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஷகான் ராஜசேகர் தலைமையில் கராத்தே அணி 17 வீரர்களுடன் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு கராத்தே அணி 9 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள், 17 வெண்கல பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப்பின் இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. வீரர்களுக்கு சென்சாய் முத்து சங்கரேஸ்வரி கோச்சாக இருந்து பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தை மேற்கு வங்காளமும், மூன்றும் இடத்தை சிக்கிம் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் அகில உலக கராத்தே போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்தா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.