ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி, ஜன.16 10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.
தேசிய ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில் ஏரோ ஸ்கேட்டோபால் ,
1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ் , ஸ்கேடிங் ஜிக்ஜாக் , ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் என பலதரப்பட்ட போட்டிகளில் 10 , 14 , 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவினர் மற்றும் சீனியர் ஆண்கள் பெண்கள் பிரிவினர் என 90 க்கும் அதிகமான ஸ்கேடிங் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தமிழகம் சார்பாக பங்கு கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளனர்.
தமிழ்நாடு, பாண்டி , அந்தமான் , மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் என பத்துக்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 500 க்கும் அதிகமான விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தேசிய அளவில் தங்க கோப்பையை பற்றி தமிழக வீரர் வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த சாதனையை சாத்தியமாக்கிய தமிழ்நாடு ஏரோ ஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் செயலாளர் பிரவீன் ஜான்சன் பொருளாலர் தங்க முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல் , வினோத் ஆகியோரின் பங்கு இன்றியமையாதது.
தேசிய அளவில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய வீரர்கள் வீராங்கனைகளை திருச்சியில் பெற்றோர்கள் உற்சாகமாக வரவேற்பு வழங்கி வரவேற்று வெற்றியினை கொண்டாடினர்.