முசிறி அரசு பள்ளியில் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டி
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் ஹேண்ட்பால் போட்டிகளை காவல் உதவி ஆய்வாளர் கோகிலா துவக்கி வைத்தார்.
திருச்சி, ஆக.8 திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் முசிறி குறுவட்ட அளவிலான மாணவர்களுக்கான வாலிபால் மற்றும் ஹேண்ட் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது போட்டிகளை முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோகிலா துவக்கி வைத்தார். வாலிபால் போட்டியின் நடுவர்களாக ஷோபனா முருகானந்தம் சிவாஜி மற்றும் சதீஷ் ஆகியோர் பணியாற்றினர் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் முசிறி அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியினரும்,17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தண்டலை புத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர் ஹேண்ட் பால் போட்டிகளின் நடுவர்களாக மெர்சி பத்மா ஆகியோர் பணியாற்றினர் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியினரும் 19 வயதுக்குட்பட்ட ஒரு பிரிவில் மூவானூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர் போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஆனந்தி செய்திருந்தார்.