கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான ஆணை : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி, ஜூன் 4 திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பையில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து 242 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்திரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், மாவட்ட நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.