தமிழ்நாடு அரசை ராக்கெட் வேகத்தில் இயக்குகிறவர் முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திருச்சி, ஜூன் 7 ஆமை வேகத்தில் இயங்கிய அரசை ராக்கெட் வேகத்தில் இயக்குகிறவர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் என்று அமைச்சர் கோவி. செழியன் கூறினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள அமயபுரம், பாம்பாட்டிபட்டி, அனுக்கானத்தம், கருப்பூர், கஸ்பா பொய்கைப்பட்டி ஆகிய ஊர்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கோவி.செழியன்
பின்னர் பேசும் போது, இந்த அரசு மக்களுக்கு தேவையான அடிப்படை உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் மக்கள் பிரதிநிதகள் மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அவை உடனே நிறைவேற்றப்படுகின்றது. ஏழை எளிய மாணவ – மாணவிகளுக்கு தாயுள்ளதோடு தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். ஆமை வேகத்தில் இயங்கிய அரசை ராக்கெட் வேகத்தில் தமிழக முதல்வர் இயக்கிக் கொண்டிருக்கின்றார் என்று பேசினார். அதனைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
முகாமில் ஶ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன், வட்டாட்சியர் செலாவம், மின்வாரிய உதவி செயறாபொறியாளர் நாகராஜன், முன்னாள் வையம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் குணசீலன், திமுக ஒன்றிய செயலாளர்கள் சீரங்கன், ராஜேந்திரன், ராமசாமி உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூகநலத்துறை, மின்வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.