மணப்பாறையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

0 210
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 7 மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பை பரிமாரிக் கொண்டனர்.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் என்று அழைக்கப்படுகின்ற பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. புத்தாடை அணிந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுதனர். இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாரிக் கொண்டனர்.

இதே போல் புத்தாநத்தம், துவரங்குறிச்சி, இளங்காகுறிச்சி, வையம்பட்டி, வளநாடு, மகாளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.