மணப்பாறை அருகே புதிய சினிமா படம் துவக்க விழா

0 758
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 7  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதிய சினிமா படம் துவக்க விழா

மணப்பாறை அருகே பெரியகாண்டியம்மன் கோயிலில் திருச்சி மாவட்டம்,லால்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் S S விஷுவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் துவங்கி எழுத்து- -இயக்கம்-தயாரிப்பில் முதல் திரைப்படம் தயாரிக்க பூஜை விழா நடைபெற்றது. ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்துசூர்யா அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
Dr.வஜ்ரா ராம் வஜ்ரா குழுமம் தேசிய தலைவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர்கள் கருத்தமிழ் சூரியன்,சக்திவேல் நாகப்பன்,சேலம் சத்தியமூர்த்தி,வல்லரசு கோபால், பல்லபுரம் முருகானந்தம்,கீழரசூர் மணிபதான், சேலம் வெங்கடேஷ் தொழிலதிபர், நடிகைகள் ஹெலன், வித்தியா குயின், வசந்தவல்லிநெல்சன் நடிக்க உள்ளனர்.
இணை இயக்குனர் மில்டன் பிரபு, ஒளிப்பதிவு ஜெயக்குமார் தங்கவேல், இசை தஷி, படத்தொகுப்பு பிரசாத், மக்கள் தொடர்பு வசந்த், தயாரிப்பு மேற்பார்வை செந்தில்குமார், உதவியாளர்கள் சுதாகர், குமார் இவர்களுடன் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தில் திரைப்படம் உருவாக உள்ளது.
வாய்ப்புகளைத் தேடி சமூக வலைதளங்களில் காத்திருக்கும் சமூக வலைதள பிரபலங்களை கதைக்களத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற ஒரு உயர்ந்த நோக்கத்தில் இயக்குனரும், தயாரிப்பாளருமான R.மணிகண்டன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.