ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் பலி

0 292
Stalin trichy visit

திருச்சி,ஜூன் 19 ஜூயபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா வயது(52) உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நிகழ்ந்த விதம்:

திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்ததால் எதிரே வந்த ஆர்டிஓ வாகனத்தின் பக்கவாட்டில் மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜேசிபி மீது மோதியதில், ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகன டிரைவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜீயபுரம் போலீசார் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Leave A Reply

Your email address will not be published.