கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்

0 302
Stalin trichy visit

திருச்சி ஜுன் 25 வருவாய்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் – வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பினர் கோரிக்கை

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலத் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நிலஅளவை துறையில் பணிபுரிந்துவரும் அலுவலர்கள் குண்டர்களால் தாக்கப்படுவது தொடரும்நிலையில் வருவாய்துறை அலுவலர்களுக்கான சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும்,

வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட வேண்டும்,

நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணியின்போது மரணமடையும் அரசு ஊழியர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவதை அமல்படுத்த வேண்டும்,

வருவாய்த்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவும் மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும்,

மேலும் தற்காலிக மற்றும் தொகுப்பு ஊதிய பணி நியமனங்களை கைவிட்டு நிரந்தர அடிப்படையில் பணிநியமனம் செய்திடவேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் 756 வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து இன்று  போராட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில் மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.