சிறப்பு கால்நடை மருத்துவமுகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், ஈச்சம்பட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர் முகாமினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, அங்கு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், பேரூராட்சிகளின் இயக்குநர் மா.பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், ஸ்டாலின்குமார், கதிரவன், கால்நடை பாராமரிப்புத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.